அரசியலுக்கு அழைப்பு விடுத்த கமலுக்கு விஜய் நன்றி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு நடிகர் விஜய் தொலைபேசியில் நன்றி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘வணக்கம் ட்விட்டர்’ பகுதியில் தொடர்சியாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அதில் ஒரு ரசிகர்,  “உங்களின் தம்பி விஜய் அண்ணண் அரசியலுக்கு வந்தால், நீங்கள் வரவேற்பீகளா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் கமல்ஹாசன், “எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்” என்று கூறியிருந்தார். 

அதனை தொடர்ந்து விஜய்யின் ரசிகர்கள் உற்சாகமானார்கள். இந்தச் செய்தி நடிகர் விஜய்யின் கவனத்திற்கு சென்றுள்ளது. வெளிப்படையாக தனக்கு அழைப்புக் கொடுத்த கமல்ஹாசனை தொலைபேசியில் அழைத்து நடிகர் விஜய் நன்றி தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்தச் செய்தியை விஜய் தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை. விஜய்யின் நெருங்கிய வட்டம் இந்தத் தொலைப்பேசி உரையாடல் உண்மைதான் என்று கூறியுள்ளது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement