டாஸ்மாக் கடைகளால் ஏற்படும் உயிரிழப்புகள் - நீதிபதி வேதனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டாஸ்மாக் மதுபானக் கடைகளால் பல்வேறு தரப்பிலும் உயிரிழப்புகள் நடப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.


Advertisement

கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் குறித்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின் போது மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை ஏன் குறைக்கக் கூடாது? எனக் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அத்துடன் தமிழக அரசின் அறிவிப்பின்படி ஆண்டுக்கு தலா 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா உள்ளிட்ட கேள்விகளுக்கும் அரசு விளக்கமளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 


Advertisement

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி கிருபாகரன், டாஸ்மாக் மதுபானக் கடைகளால் பல்வேறு தரப்பிலும் உயிரிழப்புகள் நடப்பதாக வேதனை தெரிவித்தார். இதுவரை எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது என்றும், டாஸ்மாக் கடைகளில் இயங்கும் பார்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என்றும் விளக்கமளிக்க உத்தரவிட்டார். மேலும் வழக்கை ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement