இயக்குநர் விக்னேஷ் சிவன் பாடகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
நடிகரும், இயக்குநருமாக விக்கேஷ் சிவனை பலருக்கும் தெரியும். அவர் நல்ல பாடலாசிரியரும் கூட. கடந்த 2015-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘நானும் ரௌடி தான்’படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் செம ஹட் ஆனது. ‘கண்ணானே கண்ணே’, ‘ தங்கமே’ உள்ளிட்ட பாடல்கள் பலரின் ரிங் டோனாக இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அனிருத் இசையமைத்திருந்த இந்த பாடலின் ஆசிரியர் விக்னேஷ் சிவன்தான். இந்நிலையில் விக்னேஷ் சிவன் பாடலாசிரியராக மட்டுமில்லாமல் பாடகராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, யோகிபாபு, சரண்யா உட்பட பலர் நடித்துள்ள படம், ’கோலமாவு கோகிலா’. படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. ’கோலமாவு கோகிலா’ படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இதையடுத்து அடுத்த மாதம் படத்தை ரிலீஸ் செய்ய லைகா நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் விக்னேஷ் சிவன் பாடகராக புதிய அவதாரம் எடுத்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், “ கோலமாவு கோகிலா” படத்திற்கான சிறிய சேவை என குறிப்பிட்டுள்ளார். அத்தோடு மட்டுமில்லாமல் பாடல் பாடுவதற்கு அவர் பயிற்சி எடுக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். பாடகராவும் விக்னேஷ் சிவன் உச்சம் தொடுவார் என நம்புவோமாக.
Loading More post
திருச்சி: மழைநீரில் மூழ்கி 50,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு