ஸ்பெயின் கால்பந்து வீரர் இனியஸ்டா ஓய்வு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஸ்பெயின் கால்பந்து அணியின் அனுபவ வீரரான ஆண்ட்ரஸ் இனியஸ்டா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 


Advertisement

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிந்து நாக்-அவுட் சுற்று போட்டிகள் இப்போது நடந்து வருகின்றன. மாஸ்கோவில் நேற்று நடந்த 2-வது சுற்று போட்டி ஒன்றில், ரஷியாவும் ஸ்பெயினும் மோதின. இதில் இரு அணிகளும் 1-1 என சமனில் இருந்ததால் பெனால்டி ஷூட் அவுட் முறை பயன்படுத்தப்பட்டது. இதில் ரஷியா 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.  

நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின் அதிர்ச்சித் தோல்வி அடைந்ததிற்குப் பிறகு அந்த அணியின் அனுபவ வீரரான ஆண்ட்ரஸ் இனியஸ்டா ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 


Advertisement

34 வயதான இனியஸ்டா, ஸ்பெயின் அணிக்காக 131 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் கோல் அடித்து ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வெல்ல உறுதுணையாக இருந்தவர் இவர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement