கமல் மீதான புகார் மனு: போலீஸ் விசாரணைக்கு உத்தரவு

Petition-Aganist-actor-kamal--Nellai-District-Court-orders-Police-Enquiry

மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்த வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

இதுதொடர்பாக கமல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர் வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார். புதிய தலைமுறையின் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது நடிகர் கமல்ஹாசன், இவ்வாறு பேசியதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த மனு குறித்து புலனாய்வு விசாரணை நடத்த பழவூர் போலீசாருக்கு நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார். விசாரணை குறித்த ஆய்வறிக்கையினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement