[X] Close >

எல்.ஐ.சி வாடிக்கையாளரா நீங்கள்? உங்கள் பணத்தில் ரிஸ்க் எடுக்கிறது எல்.ஐ.சி

LIC-to-buy-up-to-51--stake-in-debt-ridden-IDBI-Bank

இறந்து கொண்டிருக்கும் ஒரு வங்கியை மீட்க , பொதுமக்களின் பணத்தை பணயம் வைக்க போகிறது மத்திய அரசு. இருக்கும் வங்கிகளிலேயே ஒவ்வொரு காலாண்டிலும் கடும் நஷ்டத்தை காட்டி வரும் வங்கி ஐ.டி.பி.ஐ. (IDBI).ஏறக்குறைய செயல்பாடுகளை முடித்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறது அந்த வங்கி. ஆனால் அதனை உயிர்பிழைக்க வைக்க முடிவெடுத்திருக்கிறது மத்திய அரசு. நல்ல விஷயம் ஆனால் எப்படி ?


Advertisement

சென்னையின் அடையாளம் என்றவுடன் சட்டென்று ஞாபகம் வரும் ஒன்று எல்.ஐ.சி. ஆமாம், ஐ.டி.பி.ஐ வங்கியின் 51 சதவீத பங்குகளை வாங்க போகிறது எல்.ஐ.சி. அதாவது 60 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் சந்தித்து, ஒவ்வொரு காலாண்டுக்கும் அந்த நஷ்டத்தில் 6000 கோடியை கூட்டிக் கொண்டே செல்லும் வங்கியை பல கோடிகள் கொடுத்து வாங்கப் போகிறது எல்.ஐ.சி. அது எப்படி எல்.ஐ.சி வாங்க முடியும் ? என கேட்கிறீர்களா ? பொதுமக்கள் கட்டி வருகிற ப்ரீமியம் பணத்தை பயன்படுத்தியே. ரிஸ்க் இருக்கிற வாழ்க்கையில ரிலாக்ஸ் பண்ண வச்ச நிறுவனம், தொடர்ந்து தோற்கும் குதிரையில் பந்தயம் கட்டப் போகிறது. இதற்கான யோசனையை ஆர்பிஐ முன்மொழிய இப்போது ஐ.ஆர்.டி.ஏ அதற்கான ஒப்புதலை கொடுத்திருக்கிறது. 


Advertisement

இதிலென்ன தவறிருக்கிறது ? ஒரு வங்கியை எல்.ஐ.சி நடத்தப் போகிறது என்பது மகிழ்ச்சியான ஒன்றுதானே என கேட்கலாம். ஐ.டி.பி.ஐ வங்கி கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தை சந்தித்து வரும் வங்கி. என்ன செய்தும் பலனில்லை. ஒரு வழியாக பங்குகளை விற்று மீட்கலாம் என முடிவெடுத்தது மத்திய அரசு. மல்லையாவின் சொத்தை போல, இதனையும் வாங்க எந்தத் தனியார் நிறுவனமும் முன் வரவில்லை. ஏன், வங்கி தொடங்கும் நோக்கில் இருந்தவர்கள் கூட வரவில்லை. அப்படிப்பட்ட சூழலில்தான் தெரிந்தே எல்.ஐ.சியை சிக்கலில் தள்ளுகிறது மத்திய அரசு. பல வருடங்களாக காப்பீடு சேவையில் மிகச்சிறந்த அனுபவம் கொண்டிருந்தாலும் வங்கித்துறை என்பது எல்.ஐ.சிக்கு புதிது. புதிதாக தொடங்கவில்லை என்றாலும் கடும் நஷ்டத்தில் இருக்கும் வங்கியை பல கோடி பணம் போட்டு மீட்பது என்பது இன்றைய போட்டி சூழலில் சாத்தியமா என்பதே கேள்வி. இது ஒருபுறம் இருக்க அரசியல் கட்சிகள் இப்போதே எதிர்க்க ஆரம்பித்து விட்டன. நாடாளுமன்றத்தை முடக்க அவர்களுக்கு மற்றொரு காரணமும் கிடைத்து விட்டது.

நிதித்துறை பேராசிரியர் சஞ்சய் பக்‌ஷி இது குறித்து பேசும் போது , சில வங்கிகளை இணைத்து மொத்தமாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டது, ஆனால் அது நடக்கவில்லை, எனவே இப்படி ஒரு முடிவு. சரியாக சொல்ல வேண்டுமென்றால், எல்.ஐ.சி மத்திய அரசின் ஏ.டி.எம் என்றார். நிதித்துறை முதலீடு மற்றும் ஆலோசனை அமைப்பின் தலைவர் அமித் டாண்டன் கூறும் போது வங்கியை நடத்துவது எல்.ஐ.சி.க்கு புதிது. சரியான தலைவர்கள் கிடைப்பார்களா என்பது முக்கியம், நிதி சார்ந்தும் பல சிக்கல்கள் இருக்கிறது என்றார். மத்திய அரசின் திட்டம் சரியோ, தவறோ ஆனால் அவர்கள் பணயம் வைக்கப் போவது மக்களின் பணத்தை. அதில் கவனமாக இருந்தாலே போதும். ஏனெனில் தங்கள் வாழ்க்கையில் ரிஸ்க் இருக்கிறது என்றே மக்கள் எல்.ஐ.சி.யை நம்பினார்கள். நாளை எல்.ஐ.சி. ரிஸ்க்குக்கு சென்றால் ?.. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close