‘தளபதி63’ படத்தை இயக்குநர் பேரரசு இயக்க உள்ளதாக செய்தி பரவி வருகிறது.
‘மெர்சல்’ ப்ளாக்பாஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு விஜய், ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். மிகப் பிரம்மாண்டமான செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள். இதில் ‘பைரவா’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் மீண்டும் ஜோடியாக நடித்து வருகிறார். இதை அடுத்து விஜய்யின் ‘தளபதி63’ படத்தை இயக்குநர் பேரரசு இயக்க இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது. இவர் ஏற்கெனவே விஜய்க்கு ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’என மாபெரும் வெற்றி படங்களை கொடுத்தவர். ஒரு மாஸ் ஹீரோவாக விஜய்யை உயர்த்தி நிறுத்தியவர் இவர்.
ஆகவே இவரது இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இந்தச் செய்தியில் உண்மையில்லை என மறுத்துள்ளது விஜய்யின் நெருங்கிய வட்டம். மோகன் ராஜா, ஹெச். வினோத், அட்லீ, வெற்றிமாறன் உள்ளிட்ட சில இயக்குநர்கள் ஏற்கெனவே விஜய்க்கு கதை சொல்லி இருப்பதாகவும் அதில் ஒன்றையே விஜய் தேர்ந்தெடுப்பார் என்றும் கூறப்படுக்கிறது. தனது அடுத்த படம் யாருடன் என்பதை ஜூலையில் விஜய்யே முறைப்படி அறிவிக்கவுள்ளதாகவும் அவரது வட்டாரம் விளக்கம் அளித்துள்ளது.
Loading More post
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
டிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி