’கல்யாண வயசுதான் வந்திடுச்சுடி...’: நயன்தாராவின் ’கோகோ’ ரெடி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நயன்தாரா நடித்துள்ள ’கோலமாவு கோகிலா’ படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது.


Advertisement

நயன்தாரா, யோகிபாபு, சரண்யா உட்பட பலர் நடித்துள்ள படம், ’கோலமாவு கோகிலா’. நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. படத்தில் குடும்ப வறுமையை போக்க போதை பொருள் கடத்தும் பெண்ணாக நயன்தாரா நடித்துள்ளார். டார்க் காமெடியுடன் கூடிய த்ரில்லர் படமான இதில் நயன்தாராவை ஒரு தலையாக காதலிப்பவராக யோகி பாபு நடித்துள்ளார். அனிருத் இசையில் பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. 


Advertisement

அதிலும், ’கல்யாண வயசுதான் வந்திடுச்சுடி’ பாடல் ஆன்லைனில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. நயன்தாராவும் யோகிபாபுவும் பங்குபெறும் இந்தப் பாடலின் வீடியோ காட்சியும் சமூக வலைத்தளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் தணிக்கைக் குழு திரையிட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த குழு, யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. இதையடுத்து அடுத்த மாதம் படத்தை ரிலீஸ் செய்ய லைகா நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. 


 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement