தோனி மட்டுமா..? நானும் அடிப்பேன் - பாண்ட்யாவின் ஹெலிகாப்டர் ஷாட்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. அதற்கு முன்பாக அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி டப்ளினில் நேற்று இரவு நடந்தது. இதில் இந்திய அணி, 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


Advertisement

தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா 97 ரன்களும் தவான் 74 ரன்களும் எடுத்தனர். இந்திய பந்துவீச்சாளர்கள் குல்தீப், சேஹல் ஆகியோரும் சிறப்பாக பந்து வீசினர். 4 விக்கெட்டுகள் வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.


Advertisement

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 208 ரன்கள் குவித்தது. போட்டியின் கடைசி பந்தை ஹர்திக் பாண்ட்யா சந்தித்தார். அப்போது இந்திய அணி 202 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி பந்தில் பாண்ட்யா சிக்ஸார் விளாசினார். அந்த சிக்ஸரை தோனியின் பாணியில் ஹலிகாப்டர் ஷாட்டாக அடித்தார். ஒரு பந்தை மட்டுமே சந்தித்த அவர் 6 ரன்கள் அடித்தார்.


Advertisement

இதனையடுத்து, தோனி மற்றும் ஹர்திக் பாண்ட்யாவின் ரசிகர்கள் இந்த ஹெலிகாப்டர் ஷாட் குறித்து ட்விட்டரில் புகழ்ந்து தள்ளினர். தோனியின் ஹோம் ஒர்க் நோட்டினை பாண்ட்யா பார்த்துவிட்டு வந்து சிக்ஸர் அடித்தார் என அவர்கள் கிண்டலாக பதிவிட்டுள்ளனர். 
 

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement