பெண் போலீஸ் மகளை பாலியல் வன்கொடுமை செய்த துணை கமிஷனர்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பெண் போலீஸ்காரர் மகளை, பாலியல் வன்கொடுமை செய்ததாக, போலீஸ் துணை கமிஷனர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றுபவர் ராகுல் ஸ்ரீராம். இவருக்கு பெண் போலீஸ் ஒருவர் பழக்கமானார். இதையடுத்து, ’அம்மாவுக்கு நன்கு தெரிந்தவர்தானே’ என்று பெண் போலீசின் 23 வயது மகளும் நன்றாக பேசி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தார் ஸ்ரீராம். இதை நம்பிய அந்த இளம் பெண், அவரை வேலை விஷயமாக அடிக்கடித் தொடர்பு கொண்டுள்ளார்.


Advertisement

கடந்த பிப்ரவரி மாதம் இளம் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் துணை கமிஷ னர். இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டியே, மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். ஜூன் 21-ம் தேதி வரை இதைத் தொடர்ந்துள்ளார். 

இந்நிலையில் இந்த விஷயம் பெண் போலீசுக்கு தெரிய வந்தது. ஆவேசமடைந்த அவர் துணை கமிஷனர் மீது போலீசில் புகார் செய்தார். அவர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையறிந்தது துணை கமிஷனர் விடுப்பு எடுத்துக்கொண்டு போய்விட்டார். இதுபற்றி மேலும் விசாரித்து வருகின்றனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement