உடற்பயிற்சி செய்வதுபோல் ‘பல்ப்’ திருடியவர் : வைரலாகும் வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவை அருகே உடற்பயிற்சி செய்வது போல ஒருவர் மின்விளக்கை திருடி செல்லும் காட்சி வேகமாக பரவி வருகிறது. 


Advertisement

கோவையை அடுத்த காளப்பட்டி சாலையில், உள்ள ஒரு கடையின் பல்பை காணவில்லை என்பதால் அந்த உரிமையலார் கடையில் இருந்து சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்து உள்ளார். அப்போது, அதிகாலையில் அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் கடையின் வெளியே நின்று சிறுது நேரம் உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கிறார். பின்னர் சில நிமிடங்களுக்கு அங்கு இருந்த பல்பை நோட்டமிடும் அவர், திடீரென பல்பை கலட்டி தனது பாக்கெட்டில் வைத்து உடனடியாக அங்கு இருந்து செல்கிறார்.


Advertisement

இந்தக் காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement