கலைக்கப்படுகிறது யுஜிசி ; இனிமேல் ஹெச்.இ.சி

New-Higher-education-commission-to-be-set-up

பல்கலைகழக மானிய குழு என அழைக்கப்படும் யுஜிசியை கலைத்துவிட்டு அதற்கு பதிலாக வேறு புதிய அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கிடையில் மருத்துவ கவுன்சில் கலைப்புக்கான வேலை மற்றும் தேசிய தேர்வு வாரியம் ஆகிய பணிகள் தொடங்கியதால் யுஜிசி தப்பித்தது. இந்நிலையில் யுஜிசி சட்டல் 1951-ல் மாற்றம் கொண்டு வந்து அதனை கலைக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது


Advertisement

மத்திய அரசின் அறிவிப்பின் படி பல்கலை கழக மானியக் குழுவுக்கு பதிலாக உயர்கல்வி கவுன்சில் என்ற உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வரும் மழைக்கால கூட்டத்தொடரில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு மசோதா நிறைவேற்றப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் தொழில்நுட்ப கவுன்சில், கல்வியியல் கவுன்சில் ஆகியவையும் கலைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. 


Advertisement

மத்திய அரசு பொருத்தவரை தற்போதைக்கு உயர்கல்வி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் ஒரே அதிகார மையமாக ஹெச்.இ.சி உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் உயர்கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள், தொழிநுட்ப புகுதல் என முக்கியமான ஆராய்ச்சிகளை செய்து அதனை கல்வி மாற்றமாக அறிமுகம் செய்தலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement