JUST IN

Advertisement

பிரதமர் மோடிக்கு பாதுகாப்பை அதிகரிக்க முடிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.


Advertisement

பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல மாவோயிஸ்ட்கள் சதி செய்ததாக சமீபத்தில் திடுக்கிடும் தகவல் வெளியானது. சமீபத்தில் மாவோயிஸ்ட்கள் 5 பேரை மகாராஷ்டிரா காவல்துறையினர் கைது செய்த நிலையில் அவர்களில் ஒருவருக்கு வந்த கடிதம் மூலம் இந்த தகவல் வெளியானது.


Advertisement

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நக்சல் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை அனுப்பியுள்ளது. இந்த வருட இறுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல அடுத்த வருடம் மே மாதத்திற்குள் மக்களவை தேர்தலும் நடைபெறவுள்ளது. தேர்தல்கள் காரணமாக பல பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்பதால் கவனமாக இருக்கவேண்டும் என மாநிலங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் பாதுகாப்பு படை அனுமதி அளிப்பவர்களை மட்டுமே பொதுக்கூட்டங்களில் மோடி அருகில் அனுமதிக்கலாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. உளவுத்துறை அமைப்புகள், தேசிய பாதுகாப்பு சபை மற்றும் அமைச்சரக அதிகாரிகள் ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement