மழை வேண்டி தவளைகளுக்குத் திருமணம்

A-group-of-people-organised-a-wedding-of-two-plastic-frogs-in-Varanasi

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகே மழை வேண்டி தவளைக்கு திருமணம் செய்து வைத்து பொதுமக்கள் நூதன முறையில் வழிபாடு நடத்தினர். 


Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவை சுற்றியுள்ள பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளின் நீராதாரத்துக்காக அப்பகுதி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் தவளைகளுக்கு திருமணம் செய்யும் விழாவை நடத்தி வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டும் அப்பகுதி மக்கள் மழை வேண்டி ரப்பரால் ஆன இரண்டு தவளைக்கு திருமணம் நடத்தி வைத்தனர்.

இதற்காக குளக்கரையில் சிறிய பள்ளம் தோண்டி அதில் தண்ணீர் நிரப்பி இரண்டு தவளைகளையும் விட்டனர். பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து அதில் தவளைகளுக்கு மஞ்சள் கயிறு கட்டி திருமணம் செய்து வைத்தனர். பின்னர் 2 தவளைகளையும் அந்த குளத்தில் ஜோடியாக விட்டனர். தவளைகள் திருமணவிழாவில் பொதுமக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement