செப்டம்பரில் மீண்டும் சூடுப்பிடிக்கும் ‘சபாஷ் நாயுடு’

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பை கமல்ஹாசன் தொடங்க உள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.


Advertisement

ஒரு பக்கம் அரசியல். மறுபக்கம் சினிமா என இரட்டை குதிரையில் சவாரி செய்து வருகிறார் கமல்ஹாசன். அவர் ‘தசாவதாரம்’ படத்தில் பத்து வேடங்களில் நடித்திருந்தார். அதில் இடம்பெற்றிருந்த பல்ராம் நாயுடு கதாபாத்திரம் மிகவும் கவனிக்கப்பட்டது. ஆகவே அதை மையமாக வைத்தி 2016 ஜூன் மாதம் லாஸ் ஏஞ்சலில் ‘சபாஷ் நாயுடு’படப்பிடிப்பை தொடங்கினார் கமல். இதில் முதன் முறையாக கமல்ஹாசனுடன் சேர்ந்து ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென்று நிறுத்தப்பட்டது. அதனை அடுத்து அவர் ‘விஸ்வரூபம்2’ படத்தில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

இந்நிலையில்  ஷங்கரின்‘இந்தியன்2’ படத்தில் கமல் நடிக்கப் போவதாக செய்தி வெளியானது. அப்படி என்றால் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது. வரும் ஆகஸ்ட் 10 அன்று ‘விஸ்வரூபம்2’ வெளியாக உள்ள நிலையில் கமல், தனது ‘சபாஷ் நாயுடு’ படத்தை ‘இந்தியன்2’வுக்கு முன்னால் வெளியிட இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆகவே வரும் செப்டம்பர் மாதம் இதற்கான படப்பிடிப்பை அவர் மீண்டும் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement