கமல்ஹாசனின் கட்சியை பதிவு செய்தது இந்தியத் தேர்தல் ஆணையம் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியை இந்தியத் தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது. 
 
கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி நடந்த மதுரை பொதுக் கூட்டத்தில் கமல் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை அறிவித்தார். இதனையடுத்து அக்கட்சியின் விண்ணப்பத்தை பரிசீலனைக்கு ஏற்ற இந்தியத் தேர்தல் ஆணையம், கட்சியை பதிவு செய்வதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் மே 31ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தது.


Advertisement

இந்நிலையில் கமல்ஹாசனின் மக்கள்‌ நீதி மய்யம் கட்சியை பதிவு செய்ய எந்த ஆட்சேபனை மனுவும்‌ வரவில்லை என இந்தியத் தேர்தல் ஆணை‌யம் அறிவித்தது.  எனவே கட்சி‌யை பதிவு செய்வது தொடர்பாக வரும் 20ஆம் தேதி கட்சி நிர்வாகிகள் நேரில் ஆஜராக இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அன்றைய தினமே கட்சியின் சின்னம் குறித்து மக்கள் நீதி மய்யம் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. 


Advertisement

இந்நிலையில் அண்மையில் கட்சி நிர்வாகிகளுடன் டெல்லி சென்ற கமல், அங்கு தேர்தல் அதிகாரிகளை சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையத்தில் சாதாரண ஆலோசனை மட்டுமே நடைபெற்றது. தேர்தல் ஆணையம் அழைத்ததின் பேரில் மட்டுமே இன்று டெல்லி வந்ததாகவும் அதிகாரிகள், சில கேள்விகள் கேட்டதாகவும் விரைவில்  கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் சின்னம் பற்றிய கேள்விக்கு அதுபற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார். இந்நிலையில்  கமல்ஹாசனின்  மக்கள் நீதி மய்யம் கட்சியை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று முறையாக பதிவு செய்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement