“தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு” - பிரகாஷ் ஜவடேகர் உறுதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழக மாணவர்கள் அடுத்தாண்டு முதல் அந்தந்த மாவட்டங்களிலேயே நீட் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை அவர் தெரிவித்தார். 


Advertisement

மேலும் பிரகாஷ் ஜவடேகர் பேசுகையில், “நீட் தேர்வில் மாநில அரசு பாடத்திட்டத்தில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும். நீட் கேள்வித்தாள் தயாரிக்க நல்ல மொழிப்பெயர்ப்பாளர்களை தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட வேண்டும்  தேசிய கல்விக் கொள்கை விரைவில் கொண்டு வரப்படும். அனைத்து கல்வி வாரியங்களையும் ஒன்றாக இணைக்கும் திட்டம் ஏதும் இல்லை. 

கல்வி பெறும் உரிமை சட்டத்தில் கீழ் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அதில் பிரச்னைகள் ஏதும் இருந்தால் அதற்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாக சரிசெய்யப்படும். முத்ரா திட்டத்தின் கீழ் 12 கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. அதில் 4 கோடி பேர் புதிய தொழில் முனைவர்கள். நான்கு ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.  


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement