JUST IN

Advertisement

“8முறை தங்கம் வென்ற ஹாக்கி தேசிய விளையாட்டு இல்லையா?” கொதிக்கிறார் ஹாக்கி பாஸ்கர் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரதமர் மோடிக்கு ஹாக்கி விளையாட்டு சம்பந்தமாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் எழுதியுள்ள கடிதம் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.


Advertisement

இந்தியாவின் தேசிய கீதம் எது என்றால் அனைவரும் தயக்கமே இல்லாமல் உடனே பதில் தந்துவிடுவார்கள். நாட்டின் தேசிய மலர் எது என்று பள்ளிக்குச் செல்லும் பிள்ளையைக் கேட்டால் பளீச் என்று பதில் தந்துவிடும். நாட்டின் தேசிய பறவை எது என்றால் யோசிக்கவே வேண்டாம். பதில் பட்டவர்த்தனமாக தெரிந்துவிடும். ஆனால் நாட்டின் தேசிய விளையாட்டு எது என்று பரீட்சையில் கேட்கப்படும் கேள்விக்கு ‘ஹாக்கி’ என நீங்கள் பதில் எழுதியிருந்தால் அதற்கு மார்க் கிடைத்திருக்கும். சரியான பதில் என்று ஆசிரியரும் கூறியிருப்பார்.


Advertisement

ஆனால் அந்தக் கேள்விக்கு நாம் எழுதிய பதில் சரியானதுதானா என்று சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது மோடிக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் எழுதியுள்ள கடிதம். அவர் தனது கடிதத்தில் ‘நாட்டின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவியுங்கள்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார். அப்படி என்றால் என்ன அர்த்தம்? நாட்டின் தேசிய விளையாட்டு ஹாக்கி இல்லை என்பதுதானே? அப்படி என்றால் பரீட்சையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ‘ஹாக்கி’ என்று விடை எழுதி மதிப்பெண் கூட வாங்கினோமே அது உண்மையில்லையா? இப்படி தலையை சுற்ற வைத்திருக்கிறது பட்நாயக்கின் கடிதம். இரண்டே வரிகளில் இதை உங்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றால் வடிவேல் பாணியில் ‘இருக்கு, ஆனா இல்ல’ டைப் பதில்தான் கிடைக்கிறது நமக்கு.

இந்தப் பிரச்னை எழுவது முதன்முறை இல்லை. 2012ல் ஒரு பள்ளி மாணவி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் “நான் பரீட்சையில் ‘இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?’ என கேட்கப்பட்ட கேள்விக்கு ‘ஹாக்கி’ என்று பதில் எழுதினேன். அதற்கு மதிப்பெண்கூட கொடுத்தார்கள். ஆனால் பலர் ஹாக்கி நமது தேசிய விளையாட்டு இல்லை என்கிறார்கள். உண்மையில் நம் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருக்கிறதா? இல்லையா?” என்று கடிதம் எழுதினார். அவருக்கு வந்த பதில் ‘அப்படி ஏதும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தேசம் வெளியிடவில்லை’ என்றது. பரீட்சையில் கேட்கப்படும் கேள்விக்கு ‘ஹாக்கி’ என பதில் எழுதினால் சரியான விடையாக கூறப்படும். உண்மையில் தேசிய விளையாட்டா இல்லையா? அதற்கு முறையான பதிலை இதுவரை இந்திய அரசு தரவே இல்லை என்றே தெரிகிறது.


Advertisement

இந்நிலையில்தான் கடந்த பிப்வரி மாதம் முதல் ஒடிசா மாநிலத்தில் விழா கோலம் கொள்ள தொடங்கியது ஹாக்கி விளையாட்டு போட்டிகள். இந்திய ஆண், பெண் ஹாக்கி அணிகளுக்கான 5 ஆண்டு ஸ்பான்சரை ஏற்று கொள்வதாக ஒடிசா அரசு அறிவித்தது. வரும் நவம்பர் மாதம் ‘உலக ஹாக்கி போட்டிகள்’ அங்கே நடைபெற உள்ளன. அதற்கு முன் நாடே பெருமை கொள்ளும் நோக்கில் ஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார் நவீன் பட்நாயக். அவர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “ஒடிசாவில் ஹாக்கி மிகப் பிரபலம். அதற்கு அதிக அளவில் ரசிகர்கள் இங்குள்ளனர். பழங்குடி மக்கள்கூட ஹாக்கி மட்டையை எடுத்துக் கொண்டு வந்து விளையாடும் அளவுக்கு அந்த விளையாட்டில் ஆர்வமாக உள்ளனர். ஆகவே ஹாக்கியை வளர்க்க ஒடிசா மாநிலம் முயற்சித்து வருகிறது. ஆகவே ஹாக்கியை தேசிய விளையாட்டாக முன்மொழியுங்கள்” என்று கூறியுள்ளார்.

உண்மையில் ஹாக்கி தேசிய விளையாட்டாக இருக்கிறதா இல்லையா? 1980ல் மாஸ்கோவில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்தது இந்திய அணி. அப்போது அதன் கேப்டனாக இருந்தவர் ஹாக்கி பாஸ்கர். பச்சை தமிழர் அவர். அவரிடம் இது சம்பந்தமாக விளக்கம் கேட்டோம்.

“நீங்கள் மிக சிக்கலான கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். இந்த விவாதத்திற்கு உங்களை போல நானும் விடையை தேடிக் கொண்டிருக்கிறேன்” என்றவர் தொடர்ந்தார். “நானும் பள்ளி நாட்களில் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்றே பதில் எழுதியிருக்கிறேன். இப்போதும் ஐஏஎஸ் தேர்வில் இதே கேள்வியை கேட்கிறார்கள். அதற்கு ஹாக்கி என்றே பலரும் பதில் எழுதி மதிப்பெண் வாங்கி வருகிறார்கள். நான் அமைச்சர்கள் தலைமையில் நடந்த கூட்டங்களில் பல முறை இதே கேள்வியை முன் வைத்துள்ளேன். அதற்கு அமைச்சர்கள் தந்த பதில், ‘நாங்கள் இல்லை என்று சொல்லவில்லையே’ என்கிறனர். இல்லை என்று சொல்லவில்லை என்றால் என்ன அர்த்தம்? இருக்கு என்றுதானே அர்த்தம். 

இந்தியா சுதந்திரம் பெற்ற 1948லேயே ஹாக்கி உலக அளவில் நடைபெற்ற போட்டியில் தங்கம் வென்றது. அதுமட்டுமல்ல; இதுவரை 8 முறை ஹாக்கி தங்கம் வென்றுள்ளது. வேறு எந்த நாடும் பெற்றுள்ளதா? இந்தியாவிலுள்ள வேறு எந்த விளையாட்டாவது பெற்றுள்ளதா? இந்த ஒரு தகுதி போதாதா? இந்தியாவை உலக அரங்கில் திரும்பி பார்க்க வைத்த ஒரு பவர் ஃபுல்லான விளையாட்டு ஹாக்கி. அது இந்தியாவின் அடையாளம். அதை ஏன் முறையாக தேசிய விளையாட்டாக அறிவிக்கக்கூடாது? நவீன் பட்நாயக் ஹாக்கியை வளர்க்க பல முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்த முறை நவம்பர் மாதம் ஒடிசாவில் நடைபெற உள்ள ‘வேர்ல்ட் ஹாக்கி போட்டி’களில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்க உள்ளன.இந்தப் பொன்னான தருணத்தில் ஹாக்கியை முறைப்படி தேசிய விளையாட்டாக உறுதி செய்ய வேண்டும்” எனறு கோரிக்கை வைக்கிறார் ஹாக்கி பாஸ்கர்.    

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement