ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா அதிரடியாக விலகியுள்ளது. ஐநாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை அறிவித்தார். 

ஐநா மனித உரிமைகள் கவுன்சில் அரசியல் சார்புள்ள சாக்கடை என கடுமையான விமர்சனங்களை முன் வைத்த நிக்கி ஹேலி, ஐநா மனித உரிமைகள் கவுன்சில் தன்னாட்சி அமைப்பு போல செயல்படுவதாகவும், மனித உரிமைகள் தொடர்பாக கேலிக்கூத்து செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.மனித உரிமைகளை மீறுவோரை தண்டிக்காமல் பாதுகாக்கும் அமைப்பாகவே ஐநா பாதுகாப்பு கவுன்சில் செயல்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.

கடந்த 2006ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. தொடக்கம் முதலே இந்த அமைப்பின் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா அதிருப்தி தெரிவித்து வந்தது. குறிப்பாக இஸ்ரேல் தொடர்பான ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த சூழலில் தான் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவி ஏற்ற பிறகு ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தது. அதே போல, பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்தும் அமெரிக்கா வெளியேறியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com