[X] Close >

வைரலாக பரவும் ‘விசுவாசம்’அஜித்தின் நியூ லுக்?

Is-this-Ajith-Kumar---s-look-for----Viswasam----

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விசுவாசம்’ படத்தில் அவரது புதிய தோற்றம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.


Advertisement

இயக்குநர் சிவா இயக்கி வரும் ‘விசுவாசம்’படப்பிடிப்பில் அஜித் மும்முரமாக உள்ளார். ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் அதற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கே திட்டமிட்ட நாட்களை கடந்து படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து வருவதால் அஜித்திற்காக போடப்பட்ட அறையை நீட்டிக்க வேண்டிய நிலை எழுந்தது. ஆனால் அந்த அறை பாலிவுட் ஆக்டர் ரன்வீர் சிங்கிற்கு ஏற்கெனவே புக் செய்யப்பட்டதால் அஜித் அறையை காலி செய்து கொடுத்தார். மேலும் படப்பிடிப்பு தளத்திலேயே மிக எளிமையாக தங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இப்படத்தில் அஜித் மிக இளமையாக தோன்றி உள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதில் அஜித் ‘கிரீடம்’ படத்தின் போது இருந்த லுக்கில் உள்ளார். மேலும் அவரது வழக்கமான பெப்பர் அண்ட் சால்ட் லுக் இல்லை. இந்தப் படத்தில் இருவேறு வேடங்களில் அஜித் நடித்துள்ளதால் அவர் உடல் எடையை குறைத்து இளமைக்கு திரும்பியுள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்தத் தகவல் படக்குழுவால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அஜித் படத்திற்கு முதன்முறையாக இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். படத்திற்கான இரண்டு பாடல்கள் இதுவரை படமாக்கப்பட்டுள்ளன. மேலும் படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close