அஜித் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ திரைப்படத்தின் ஹிந்தி டப்பிங் பிரதி யூடியூபில் சாதனை படைத்துள்ளது.
நடிகர் அஜித்குமார் நடிப்பில்‘விவேகம்’திரைப்படம் 2017 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் உலகளவில் வெளியானது. சிவா இயக்கிய இத்திரைப்படத்தில் விவேக் ஒபரோய், காஜல் அகர்வால், அக்ஷ்ரா ஹாசன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களை கொண்ட இத்திரைப்படம் ஹிந்தி மொழியில் டப்பிங் செய்யப்பட்டு முழு நீளப் படமமாக யூடியூபில் கடந்த ஜூன் 17ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டது. இத்திரைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர். மேலும் இன்று காலை நிலவரப்படி 80 லட்சத்துக்கு மேலானோர் யூடியூபில் பார்த்துள்ளனர்.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் போட்டுள்ளனர். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ‘விவேகம்’திரைப்படத்தை யூடியூபில் பலர் கண்டுகளித்துள்ளனர். ‘விவேகம்’ திரைப்படம் வணிக ரீதியில் ஒரு வெற்றி படமாகவே திகழ்ந்தது. இத்திரைப்படத்தின் ஹிந்தி டப்பிங் தற்போது யூடியூபில் வெளியாகி சாதனை படைத்துள்ளதையொட்டி படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Loading More post
''கோப்பையை என் கைகளில் கோலி கொடுத்தபோது கண் கலங்கிவிட்டேன்'' - மனம் திறந்த நடராஜன்!
“நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன்” - ஈரோடு பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு
உங்க பெயர் கமலாவா? அப்போ உங்களுக்கு இலவசம்! - பொழுதுபோக்கு பூங்காவின் அறிவிப்பு
குடியரசு தின அணிவகுப்பில் அதிவேக விமானப்படையை வழிநடத்தும் முதல் பெண்மணி சுவாதி ரத்தோர்
‘சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்: உதவியுடன் எழுந்து நடக்கிறார்’ - விக்டோரியா மருத்துமனை
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!