உமர் அப்துல்லா ஆளுநருடன் திடீர் சந்திப்பு

உமர் அப்துல்லா ஆளுநருடன் திடீர் சந்திப்பு
உமர் அப்துல்லா ஆளுநருடன் திடீர் சந்திப்பு

ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படுமா அல்லது யாராவது யாருடனாவது இணைந்து ஆட்சி அமைப்பர்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் 2வது பெரிய கட்சியான பாஜக ஆளுநர் ஆட்சியே சரி என்று சொல்லி விட்டது. எனவே ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்கலாம் என்றால் 3வது பெரிய கட்சியான தேசிய மாநாட்டு கட்சியை அழைக்கலாம். 

மெகபூஃபா முப்ஃதி தனது இராஜினாமாவை ஆளுநரிடம் அளித்துள்ள நிலையில் , தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் உமர் அப்துல்லா ஆளுநர் என்.என்.வோராவை திடீரென சந்தித்துள்ளார். இதனால் அடுத்து என்ன நிகழப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனெனில் தேசிய மாநட்டு கட்சி காங்கிரஸ் மற்றும் சுயேட்சைகளை சேர்த்துக் கொண்டு ஆட்சி அமைக்க முயலாலம். 

உமர் அப்துல்லா ஆளுநரை சந்தித்துள்ளதால், அவர் ஆட்சி அமைக்க முயலலாம் என்ற எதிர்பர்ப்பு தற்போது ஜம்மு காஷ்மீர் அரசியலில் பரபரப்பாகியுள்ளது

பின்னணி : 

பிடிபிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் காஷ்மீரில் என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காஷ்மீரில் ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவை. ஆனால் பிடிபிக்கு 28 இடங்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் ஆதரவை பெற்றால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும். 

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெஹபூபா முப்ஃதி தனது இராஜிநாமாவை ஆளுநர் என்.என்.வோராவிடம் அளித்துள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 5 மணிக்கு பேச உள்ளார். இது குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் , பாஜக தனது தவறை ஒப்புக் கொண்டதற்கு நன்றி என்றும் இந்த கூட்டணி நீண்ட காலம் செல்லாது என்று முன்பே சொன்னதாகவும் தெரிவித்தார். 

இது போன்ற சூழலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முயலுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, பிடிபி கட்சியோடு சேர்ந்து ஆட்சி அமைக்கும் கேள்விக்கு இடமே இல்லை என்றும் பிடிபியுடன் சேர்ந்து எப்படி ஆட்சி அமைக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com