‘இந்தியன்2’வுக்கு முன்பாக ‘சபாஷ் நாயுடு’: கமல் பக்கா ப்ளான்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

‘இந்தியன்2’ படத்திற்கு முன்பாக ‘சபாஷ் நாயுடு’ படத்தை முடிக்க கமல்ஹாசன் திட்டமிட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.


Advertisement

கமல்ஹாசன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சபாஷ் நாயுடு’. கமல் ஏற்கெனவே 10 கதாப்பாத்திரங்களில் நடித்திருந்த ‘தசாவதாரம்’ படத்தில் இடம் பெற்றிருந்த பல்ராம் நாயுடு கதாப்பாத்திரத்தின் தொடர்ச்சியாக இதன் கதை வடிவமைக்கப்பட்டது. இதில் கமல் ‘ரா’ ஏஜெண்ட்டாக நடித்து வருகிறார். இந்தப் படப்பிடிப்பு 2016ம் ஆண்டு ஜூன் மாதம்லாஸ் ஏஞ்சலில் தொடங்கியது. இந்தப் படத்தின்  படப்பிடிப்புக்காக கமல், ஸ்ருதிகாசன் உள்ளிட்ட குழுவினர் அப்போது பங்கேற்றனர். முதன் முறையாக ஸ்ருதிஹாசன் அவரது தந்தை கமல்ஹாசனுடன் சேர்ந்து நடித்து வருகிறார். ஆகவே அதை குறித்து கருத்து தெரிவித்திருந்த ஸ்ருதி, ‘பல வருட கனவு நனவாகியுள்ளதாக’ தெரிவித்திருந்தார். இதன் படப்பிடிப்பு வேறு சில காரணங்களால் திடீரென்று நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் தொடங்க உள்ள ‘இந்தியன்2’ படத்திற்கு முன்பாக கமல்ஹாசன், ‘சபாஷ் நாயுடு’வை முடிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த வாரம் தான் தனது ‘விஸ்வரூம்2’ படத்தின் ட்ரெய்லரை கமல் வெளியிட்டிருந்தார். அந்தப் படத்தில் ஆண்ட்ரியா, பூஜா குமார், நாசர், சேகர்கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement