குப்பைத் தொட்டியில் மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: தாய்ப்பால் கொடுத்த பெண் போலீஸ் கதறல்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பெங்களூரில் குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழந்தது. அந்தக் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீஸ் கண்ணீர் விட்டு கதறி அழுதார். 


Advertisement

பெங்களூரில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் குப்பைத் தொட்டியில், பிறந்த குழந்தை ஒன்று கிடப்பதாக போலீஸுக்கு தகவல் வந்தது. அந் த இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். குழந்தை ரத்தக்காயத்துடன் அழுதுகொண்டிருந்தது. அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருந்தும் குழந்தை அழுதுகொண்டே இருந்தது. அதைக் கண்ட அர்ச்சனா என்ற பெண் போலீஸ், பசிக்காகத்தான் குழந்தை அழுகிறது என்பதை உணர்ந்து, தாய்பால் கொடுத்தார். சிறிது நேரத்தில் குழந்தை அழுகையை நிறுத்தியது. ஜூன் முதல் வாரத்தில் நடந்த இந்தச் சம்பவம் பெங்களூரில் பரபரப்பானது. இந்த மனிதாபிமானச் செயலுக்காக பெண் போலீஸ் அர்ச்சனாவுக்கு பாராட்டுகள் குவிந்தது. கர்நாடக முதல்வர் குமாரசாமியும் ட்விட்டரில் அர்ச்சனாவைப் பாராட்டினார்.


Advertisement

இந்த சம்பவம் பற்றி அர்ச்சனா கூறும்போது, ’பேறுகால விடுப்பு முடிந்து சமீபத்தில்தான் வேலையில் மீண்டும் சேர்ந்தேன். எனக்கு ஐந்து மாத ஆண் குழந்தை உள்ளது. கைவிடப்பட்ட குழந்தை பற்றி தகவல் வந்ததும் விரைந்து சென்று மீட்டோம். குழந்தையை கைகளால் தூக்கினேன். அப்போதுதான் குழந்தை பிறந்திருக்க வேண்டும். ரத்தக் காயமும் இருந்தது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். டாக்டர் கள் குழந்தை நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகத் தெரிவித்தனர். உடனே குழந்தை அழத் தொடங்கியது. தொடர்ந்து அழுதுகொண்டே இருந்த தால், தாய்ப்பால் கொடுத்தேன். நான் பால் கொடுக்கும்போது என் மகன் அஷித்துக்கு கொடுப்பதாக நினைத்துக்கொண்டேன்’ என்று கூறியிருந் தார்.

இந்நிலையில் காப்பகம் ஒன்றில் கொடுக்கப்பட்ட அந்தக் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால், ஜெயநகரில் உள்ள குழந்தைகள் நல மரு த்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதைக் கேட்டதும் தாய்ப்பால் கொடுத்த பெண் போலீஸ் அர்ச்சனா, கதறி அழுதார். இன்னும் அவர் அமைதியின்றி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement