'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

"இந்திய அணியைவிட மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் எங்கள் அணியில் இருக்கிறார்கள்","இந்தியாவுடன் விளையாடுவதால் பதற்றம் எல்லாம் இல்லை" இவை எல்லாம் ஆப்கானிஸ்தான் கேப்டன் அக்சர் ஸ்டானிக்சாய் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக உதிர்த்த முத்துக்கள்.


Advertisement

ஐசிசி ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து அண்மையில் வழங்கியது. இதனையடுத்து இந்தியாவுடனான தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாட தீர்மானித்தது. இந்தப் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.


Advertisement

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கில் அதிரடி காட்டியது. ஷிகர் தவாண், முரளி விஜய் ஆகியோர் சதம் விளாசினர். மேலும் ஹர்திக் பாண்டியா 71 ரன்கள் குவித்தார். இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 474 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.ஆப்கான் கேப்டன் சொன்னது போல அந்த அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் அடித்து துவைத்தனர்.


Advertisement

ஆனால் அதற்கு நேர்மாறாக இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆப்கன் பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்தனர். ஆப்கன் அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்னுக்கும் இரண்டாவது இன்னிங்ஸில் 103 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது.

இதில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டையும், ஜடேஜா 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆப்கான் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட்டில் இரண்டாம் நாளிலேயே தோற்றது.

ஆப்கன் அணி இந்த டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக வங்கேதசத்துடனான டி20 போட்டியில் பங்கேற்று தொடரை வென்ற உத்வேகத்தில் இருந்தது. அதன் காரணமாகவே ஆப்கன் கேப்டன் அக்சர் ஸ்டானிக்சாய், தைரியமாக பேட்டிக் கொடுத்தார்.

இதை மையமாக வைத்துதான், "கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுனீங்க" என ஆப்கான் அணியை நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.

போட்டி முடிந்தவுடன் இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. ஆனால் கேப்டன் ரஹானே ஆப்கான் அணியினரையும் அழைத்து கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்திய அணியின் இந்தச் செயலையும், ரஹானேவை பாராட்டியும் மீம்ஸ் பறக்கிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement