உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் சவுதி அரேபிய அணியை, ரஷ்ய அணி பந்தாடியது.
பன்னாட்டு கால்பந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நேற்று தொடங்கியது. தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற முதல் போட்டியில் ரஷ்ய அணி, சவுதி அரேபியாவை எதிர்கொண்டது. மாஸ்கோவில் நடைபெற்ற விறுவிறுப்பு போட்டியில் ஐந்துக்கு பூஜ்யம் என்ற கோல்கள் கணக்கில் ரஷ்ய அணி வெற்றியை வசப்படுத்தியது. ஆட்டத்தின் 12 ஆவது நிமிடத்தில் ரஷ்ய அணிக்காக யூரி கேஸ்சின்ஸ்கி கோல் கணக்கை தொடக்கினார். இதன்பின்னர் 43 ஆவது நிமிடத்தில் டெனிஸ் செரிஷேவ் இரண்டாவது கோலை அடித்தார்.
இதனைத்தொடர்ந்து ஆர்ட்டம் 71 ஆவது நிமிடத்தில் ரஷ்ய அணிக்காக கோல் அடித்தார். ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் டெனிஸ் செரிஷேவ் மற்றுமொரு கோல் அடிக்க, அலெக்சாண்டர் கோலோவின் ரஷ்ய அணிக்காக ஐந்தாவது கோலை அடித்தார். இந்த வெற்றியை மைதானத்தில் திரண்டிருந்த ரஷ்ய அணி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?