[X] Close >

சதமடித்தார் தவாண் ! ரஷீத் கானை தெறிக்கவிட்டார்

India-vs-Afghanistan--One-off-Test--Day-1-Live-Cricket-score--Shikhar-Dhawan-slams-century-off-87-balls

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவாண் சதமடித்து அசத்தினார். பெங்களூர் சின்னாசாமி ஸ்டேடியத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 87 பந்துகளில் 100 ரன்களை அடித்து, ஆப்கான் அணியின் ரஷீத் கான் மற்றும் முஜூபுர் ரஹ்மான் சுழற் பந்துகளை நாலா புறமும் சிதறடித்தார் தவாண்.


Advertisement

ஆப்கான் அணி டெஸ்ட் போட்டியில் விளையாட அண்மையில் ஐசிசி அனுமதியளித்தது. இதனையடுத்து தங்களது வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் டெஸ்ட்டை இந்தியாவுடன் மோதியது. இந்தப் போட்டியில் டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தவாண் மற்றும் முரளி விஜய் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.


Advertisement

ஒரு முனையில் முரளி விஜய் நிதான ஆட்டத்தையும், மறுமுனையில் ஷிகர் தவாண் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தப் போட்டியில் மிகவும் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆப்கான் அணியின் சுழற் புலி ரஷீத் கான் 7 ஓவர் வீசி 51 ரன்களை கொடுத்தார். இதற்கடுத்தபடியாக முஜூபுர் ரஹ்மான் 5 ஓவர் வீசி 32 ரன்களை கொடுத்தார்.


Advertisement

தவாண் சரியாக கணக்கிட்டு இந்த இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களையும் அடித்து நொறுக்கி தெறிக்கவிட்டனர். உணவு இடைவேளை வரை இந்தியா விக்கெட் இழப்பின்றி 158 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் 41 ரன்களுடனும், ஷிகர் தவாண் 104 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close