நீதிமன்றத்தில் உள்ள விவகாரங்கள் குறித்து பேச அனுமதி மறுத்ததற்கெல்லாம் வெளிநடப்பு செய்யக் கூடாது என திமுகவினரை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பேரவையில் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஆனால் இது நீதிமன்ற விவகாரம் என்பதால், அவையில் இது குறித்து பேச முடியாது என சபாநாயகர் தனபால் அனுமதி வழங்க மறுத்தார். இதைத் தொடர்ந்து திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவையில் பிரச்னை எழுப்ப முயற்சித்தபோது, அப்போது துணை முதல்வராக இருந்த ஸ்டாலின், நீதிமன்றத்தில் உள்ள விவகாரம் எனக் கூறி பேச அனுமதி மறுத்தார் என கூறினார். எனவே இந்தக் காரணத்துக்கெல்லாம் வெளிநடப்பு செய்வதை திமுகவினர் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
Loading More post
ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
சீர்காழி: 2 பேரை கொன்றுவிட்டு நகை கொள்ளை - கொள்ளையரை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்!
ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி