உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க பிரான்ஸ் அணி ரஷ்யா சென்றது. பிரான்ஸ் அணி வீரர்கள் மாஸ்கோ விமான நிலையத்தில் இருந்து பேருந்து மூலம், ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகக்கோப்பை போட்டி ரஷ்யாவில் வரும் 14ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை களைகட்ட உள்ளது. பிரான்ஸ் அணி, ஆஸ்திரேலியா, பெரு, டென்மார்க் அணிகளுடன் சி பிரிவில் இடம் பெற்றுள்ளது. முன்னாள் உலகச் சாம்பியனான பிரான்ஸ் தனது முதல் லீக் ஆட்டத்தில் வரும் 16ஆம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இதே போல் பிரேசில் அணியும் ரஷ்யா சென்று சேர்ந்துள்ளது, நெய்மார் உள்ளிட்ட வீரர்கள் மாஸ்கோவிலிருந்து தாங்கள் தங்கும் சோச்சி நகருக்கு சென்றனர். இ பிரிவில் இடம்பெற்றுள்ள பிரேசில் அணியுடன் கோஸ்டாரிகா, சுவிட்சர்லாந்து, செர்பியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. பிரேசில் தனது முதல் போட்டியில் வரும் 17ம் தேதி சுவிட்சர்லாந்துடன் விளையாடுகிறது
Loading More post
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்
கொரோனா 2-ம் அலை எதிரொலி: பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி!
ஐபிஎல் 2021: டாஸ் கணக்கை மாற்றி அமைத்த கேப்டன்கள்!
கொரோனா போராளிகளுக்கு ஏப்.24-க்குப் பிறகு புதிய காப்பீட்டு பாலிசி!
இரவு நேர ஊரடங்கால் ஆம்னி பேருந்துகள் முடக்கம் - 2 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி