கமல் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வரூபம்-2 படத்தின் ட்ரெய்லர் வருகிற 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் இயக்கி, நடித்த திரைப்படம் விஸ்வரூபம். இது 2013ம் ஆண்டு வெளியானது. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி வெற்றி பெற்றது. அதில் பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் ஆகியோர் நடித்திருந்தனர். முதல்பாகம் எடுக்கும்போதே இரண்டாம் பாகத்திற்கான பல காட்சிகளும் எடுக்கப்பட்டுவிட்டதாக பட குழுவினர் அறிவித்திருந்தனர். படம் 2015 ஆண்டு வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட சிக்கலால் படம் வெளியாவத்தில் தாமதம் ஆனதாக சொல்லப்பட்டது. அதன்பின் உத்தமவில்லன், பாபநாசம், தூங்கவனம் போன்ற படங்களில் நடித்து முடித்த கமல், கடந்த ஆண்டு ‘பிக்பாஸ்’ என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினர். இந்த நிலையில் விஸ்வரூம்-2 படம் விரைவில் வெளியாகும் என் அறிவித்த கமல், ஃபஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டியிருந்தார்.
அதன்பின் அரசியல் களத்தில் பிஸியாக இருந்த கமல், தற்போது விஸ்வரூபம்-2 படத்தின் ட்ரெய்லர் வருகிற 11-ம் தேதி வெளியாகும் என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்தி பாகத்தின் ட்ரெய்லரை அமீர்கான் வெளியிடுகிறார். அதேபோல் தமிழ்ப் பாகத்தின் ட்ரெய்லரை ஸ்ருதிஹாசன் வெளியிடுவார் எனவும், தெலுங்கு ட்ரெய்லரை ஜூனியர் என்.டி.ஆர் வெளியிடுவார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?