ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் மின்மாற்றிகளுக்கு தேவையான காப்பர் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
பேரவையில் இன்று நடந்த விவாதத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி. சாமி, திருவொற்றியூர் தொகுதியில் பறவை அமர்ந்தால் கூட மின்மாற்றி பழுதாவதாகவும், எனவே மின்மாற்றியை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தமிழகத்திற்கு தேவையான மின்மாற்றிகளை அமைக்க ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து காப்பர் பெறப்பட்டு வந்ததாகவும், தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் அங்கிருந்து காப்பர் பெற முடியாத சூழல் இருப்பதாகக் கூறினார்.
மாற்று இடத்தில் இருந்து காப்பர் வாங்கி, மின்மாற்றிகள் அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், விரைவில் தேவையான இடங்களில் மின்மாற்றிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி உறுதி அளித்தார்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?