[X] Close >

ராமேஸ்வர விடுதி அறையில் தம்பதியினர் சடலமாக மீட்பு

Couple-body-rescued-in-Rameswaram-hotel

ராமேஸ்வரத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தங்கும் விடுதி அறையில் தம்பதி பிணமாக மீட்கப்பட்டனர். காவல்துறை விசாரணையில் உயிரிழந்தவர்கள் ஈரோடு மாவட்டம் பெரியபாளையத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் அவரது மனைவி காளீஸ்வரி என்பது தெரியவந்தது.


Advertisement

ராமேஸ்வரத்தில் செயல்பட்டு வந்த தங்கும் விடுதி ஒன்றில் ஈரோட்டை சேர்ந்த தம்பதியினர் தங்கியுள்ளனர். முறையான அனுமதியின்றி இந்த விடுதி செயல்பட்டு வந்திருக்கிறது. இதனிடையே அறையில் தங்கியிருந்த இருவரும் நேற்று மாலை முதல் இன்று காலை வரை வெளியே வராததால் சந்தேகமடைந்த விடுதியின் உரிமையாளர் அறைக்கதவை தட்டியுள்ளார். கதவைத் திறக்காததால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது தம்பதிகளான சரவணன் மற்றும் காளீஸ்வரி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இருவரும் மதுவில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

சரவணன் சட்டைப் பையில் அவரது முகவரி இருந்தது. அதன்மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close