பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் நடுத்தர மற்றும் சாமனிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல் அன்றாடம் பயன்படுத்தும் பால், காய்கறிகள், மளிகைப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள விஜயகாந்த் மத்திய, மாநில அரசுகள் இதனை முக்கிய பிரச்னையாக கருத வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். ஜிஎஸ்டி-யால் அரசுக்கு லாபம் இருக்கலாம். ஆனால் மக்களுக்கு எவ்விதத்திலும் பலன் இல்லை எனவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஆகவே, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
Loading More post
புதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!
புதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!
கண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்!
“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி
ராமர் பாலம் எப்போது, எப்படி உருவானது? - கடலுக்கடியில் ஆய்வு செய்ய மத்திய அரசு ஒப்புதல்!
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!