கர்நாடகாவில் காலாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: மக்கள் விரும்பவில்லை என்கிறார் குமாரசாமி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கர்நாடகாவில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்துக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.


Advertisement

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காலா’ திரைப்படம் வரும் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. மும்பை தமிழர்களின் வாழ்க்கையை பின்புலமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ரஜினியின் அரசியல் வாழ்க்கைக்கு இந்தப் படம் பெரிதும் உதவும் என அவரது ரசிகர்கள் நம்பி வருகின்றனர். ஆகவே படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 

இதனிடையே, ‘காலா’வுக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. சமீப காலமாகவே ரஜினி காவிரி பிரச்னை சம்பந்தமாக கருத்துக்கள் கூறி வந்தார். அந்தக் கருத்துக்கள் கர்நாடக மாநில மக்களுக்கு எதிராக இருந்ததால் இந்த நடவடிக்கையை வர்த்தக சபை மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 


Advertisement

இருப்பினும், காலா படம் கர்நாடகாவில் ரிலீஸ் செய்வது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் குமாரசாமி கூறியிருந்தார். செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய குமாரசாமி, “காலா படத்தை கர்நாடகாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை என்னுடைய கவனத்திற்கு வந்தது. கர்நாடக மக்களும், கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் காலா படம் ரிலீஸ் ஆவதை விரும்பவில்லை. சில கன்னட அமைப்புகளும் அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர். இதில் நான் ஆலோசித்து முடிவு செய்வேன்” என்று கூறினார்.

இந்நிலையில், கன்னட ரக்‌ஷின வேதிகே அமைப்பினர் காலா படத்துக்கு எதிராக இன்று போராட்டம் நடத்தினர். ரஜினியின் காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் உள்ள கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முன்பு இந்தப் போராட்டம் நடைபெற்றது.  


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement