இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம் மணிப்பூரில் அமைகிறது.
இதுதொடர்பான மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த 23ஆம் தேதி ஒப்புதல் அளித்து, குடியரசுத் தலைவரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துவிட்டதால், நாட்டின் முதல் தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம் மணிப்பூர் மாநிலம் இம்பாலில், சுமார் 325 ஏக்கர் பரப்பில் அமையவுள்ளது. விளையாட்டு அறிவியல், விளையாட்டு தொழில்நுட்பம், விளை யாட்டு நிர்வாகம் மற்றும் உயர்மட்ட பயிற்சி ஆகியவை, விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை
கொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்