தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் ரவுண்ட் கட்டும் ஸ்ருதிஹாசனின் இப்போதைய கால்ஷீட், இந்திப் படத்துக்கு!
இயக்குனர் மகேஷ் மஞ்ரேக்கர் 12 வருடத்துக்குப் பிறகு இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஸ்ருதி. கேங்ஸ்டர் படமான இதில் ஸ்ருதிக்கு சிறு நகரத்துப் பெண் கேரக்டர். வழக்கம் போல ஹீரோவின் மீது காதலில் விழுந்து, அவரை விரட்டி விரட்டிக் காதலிக்கும் கேரக்டர்தான் அவருக்கு. ஆனாலும், ’இது வழக்கமானதாக இருக்காது, வித்தியாசத்தைப் பார்க்கலாம்’ என்கிறது யூனிட்!
ஸ்ருதி விரட்டி விரட்டி காதலிக்கும் அந்த ஹீரோ, வித்யுத் ஜம்வால்! தமிழில், அஜீத்தின் ’பில்லா 2’, விஜய்யின் ’துப்பாக்கி’யில் வில்லனாக மிரட்டியவர். ’அஞ்சான்’ படத்தில் சூர்யாவின் உயிர் நண்பனாக வந்து பொசுக்கென்று உயிரை விடும் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த வில்லனைதான் படத்தில் காதலிக்கிறார் ஸ்ருதி.
(அம்மா சரிகா, இயக்குனர் மகேஷ் மஞ்சரேக்கருடன் ஸ்ருதி)
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினும் இருக்கிறார். அவர், சோனல் சவுகான். மேலும் நஸ்ருதின் ஷா, அமோல் பலேகர் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு கோவாவில் தொடங்குகிறது.
Loading More post
“14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்” - நடராஜனுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
புனே: கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் திடீர் தீவிபத்து
பேரறிவாளன் விடுதலையில் 3-4 நாள்களில் ஆளுநர் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தொண்டர்களை பார்த்து கைகளை அசைத்த சசிகலா - வீடியோ!
டாஸ்மாக்கில் ரசீது கொடுக்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!