[X] Close >

கூலான விலையில் கூல்பேட் நோட் 5 லைட்!

Coolpad-Note-5-Life-Features

கூல்பேட் நிறுவனத்தின், நோட் 5 லைட் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆக உள்ளது. இந்த மொபைலில் பல சிறம்பம்சங்கள் காணப்படுகிறது.


Advertisement

கடந்த செப்டம்பரில் வெளியான கூல்பேட் 5 நோட்டின் தொடர்ச்சியாக, தற்போது கூல்பேட் நோட் 5 லைட் வெளிவர உள்ளது. இதன் விலை ரூ. 8199 தான். ஆனால் பிங்கர் பிரின்ட் சென்சார் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. பொதுவாக ரூ.8,000 அளவிலான மொபைல்களில் பிங்கர் பிரின்ட் சென்சார் வசதி இருப்பதில்லை.

செல்ஃபிக்களை பெரிதும் விரும்புவர்களுக்கு ஏற்றவாறு 8 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமராவும், 13 மெகாபிக்சல் பின்பக்க கேமராவும் உள்ளது. கூடுதல் சிறப்பு என்னவென்றால் இரண்டு பக்கம் உள்ள கேமராக்களில் எல்ஈடி பிளாஸ் லைட் வசதி உள்ளது. இதன்மூலம் மங்கலான வெளிச்சத்திலும் கூட பிரைட்டாக புகைப்படங்கள் எடுக்கலாம். காலையில் இருந்து இரவு தூங்கச் செல்லும் வரை அன்றாட நிகழ்வுகளை புகைப்படங்களாக எடுத்து அழகு பார்ப்பவர்களுக்கு இந்த மொபைல் நன்றாகவே பிடிக்கும்.


Advertisement

மார்ச் 21-ஆம் தேதி முதல், பிரத்யேமாக அமேசான் மூலம் இந்த மொபைலை வாங்கலாம். வேறெங்கும் வாங்க முடியாது. குறைந்த விலையில் பல சலுகைகள் இருப்பதால் விரைவில் விற்றுத் தீர்ந்து விடும் எனக் கூறப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

. 5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே தரம்.


Advertisement

. ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷல்லோ வகையை சார்ந்த கூல் யூசர் இன்டர்ஃபேஸ் 8.0 இயங்குதளம்.

. கோல்டு மற்றும் கிரே நிறங்களில் வெளிவரவிருக்கும் இதன் எடை வெறும் 148 கிராம் தான்.

. இரட்டை சிம் வசதி. 3ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி.

. வை-பை, ப்ளூடூத் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் 2500 மி.ஆம்பியர் திறன் கொண்ட பேட்டரியும் கொண்டது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close