6.22 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வெளியானது விவோ ஒய்83

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவில் விவோ ஒய்83 ஸ்மார்ட்போன் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


Advertisement

சீன நிறுவனமான விவோ தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனை ஒய்83-ஐ இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்திய சந்தையில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் மட்டுமே வரவேற்பை பெற்றுள்ளதால், விவோவும் தற்போது ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் வெளியிட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த வாரம் சீனாவில் வெளியானதை தொடர்ந்து, இன்று இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.14,990 ஆகும்.


Advertisement

இரட்டை சிம் கார்டுகள் பொருத்தும் வசதியுடன், ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்துடன் விவோ ஒய்83 வெளியாகியுள்ளது. இதன் டிஸ்ப்ளே 6.22 இன்ச் ஆகும். 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்நல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 13 எம்பி கேமராவும், முன்புறத்தில் 8 எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது. அத்துடன் 3260 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. 
 

loading...

Advertisement

Advertisement

Advertisement