தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சர்வதேச கவனத்தை ஈர்த்தது !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் இப்போது சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. ஆம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை வல்லுநர்கள் தமிழகத்தில் நடைபெற்றுள்ள இந்தத் துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு அரிசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து இந்தச் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஓயவுப் பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணைக்கும் தமிழக அரசு உத்தரவி்ட்டுள்ளது.


Advertisement

இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் வல்லுநர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது, அதில் "மக்கள் தங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும் தங்கள் வாழ்வுரிமைக்காகவும் மேற்கொண்ட போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது கவலையளிக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக இந்திய அரசு சுதந்திரமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் விசாரணை மேற்கொண்டு, மனித உரிமையை நிலைநாட்ட வேண்டும். இதன் மூலம் ஒரு நிறுவனத்துக்காக மனித உரிமைகள் ஒருபோதும் நசுக்கப்படக் கூடாது. ஐக்கியநாடுகள் சபை அனைத்து நிறுவனங்களுக்கும் எப்படி செயல்பட வேண்டும் என்ற வரைமுறையை வகுத்துள்ளது. அதன்படி ஒவ்வொரு நிறுவனமும் மனித உரிமையை மதித்து நடக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக வேதாந்தா நிறுவனம், தூத்துக்குடியில் தங்களது ஸ்டெர்லைட் காப்பர் ஆலையால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் தனது உற்பத்தியை தொடங்கும்பட்சத்தில் இந்திய அரசு, அனைத்துவிதமான சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றுகிறதா என்று சோதனை செய்த பின்புதான் ஆலை செயல்படுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement