சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சி அருகே இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 3ஆவது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது ஆவரங்காடு மற்றும் கச்சநத்தம் கிராமங்கள். கச்சநத்தம் கோவில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்குவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே முன் விரோதம் இருந்திருக்கிறது. இதன் காரணமாக இரு பிரிவினருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த சிலர் வழிமறித்து தாக்கியுள்ளதாக தெரிகிறது.
இதனையடுத்து கடந்த 28ஆம் தேதி கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆவரங்காடு கிராமத்தினர், கச்சநத்தம் கிராமத்திற்குள் புகுந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்களை கத்தியால் சராமாரியாக தாக்கினர். இச்சம்பவத்தில் சுரேஷ், சந்திரசேகர், மருது, மலைச்சாமி, சுகுமாறன், தனசேகரன்,ஆறுமுகம், சண்முகநாதன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆறுமுகம் மற்றும் சண்முகநாதன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே உயிரிழந்தனர். தொடர்ந்து மற்ற ஆறு பேரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கெனவே உயிரிழந்த இருவரின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே 3ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மூன்றாவதாக ஒருவர் உயிழந்துள்ளார்.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'