JUST IN

Advertisement

‘களவாணி2’வில் இணையும் நடிகை ஓவியா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகை ஓவியா ‘களவாணி2’ நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகி வருகிறது.


Advertisement

சற்குணம் இயக்கத்தில் 2010ம் ஆண்டில் வெளியான படம் ‘களவாணி’. இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடித்திருந்தார். அந்தப் படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அதன் பிறகு ஓவியா பல படங்களில் நடித்திருந்தாலும் அவரது நடிப்பையும் புகழையும் உயர்த்தும் வகையில் எந்தப் படங்களும் அமையவில்லை. எல்லாம் ஆவரேஜ் ரகம்தான். ஆனால் சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஓவியாவிற்கு ‘பிக்பாஸ்’ வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு என்ன நடந்தது என்பது எல்லாம் உலகம் அறிந்த உண்மை. ஓவர் நைட்டில் அவர் புகழ் வாய்ந்த நடிகையானார்.

இந்நிலையில் பல ஆண்டுகள் கடந்து இயக்குநர் சற்குணம் அவரது ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு தஞ்சாவூர் பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது. இதில் மீண்டும் விமலே நாயகனாக நடிக்கிறார். மேலும் ஓவியாவும் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஜூன் மாதத்தின் நடுவில் நடைபெற உள்ள படப்பிடிப்பில் ஓவியா பங்கு கொள்ள இருக்கிறார். அவரது காட்சிகள் ஒரே கட்டத்தில் தொடர்சியாக படமாக்கப்பட உள்ளன. ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் பங்கேற்கும் படப்பிடிப்பு என்பதால் கெடுபிடிகள் அதிகமாகவே இருக்கும் எனத் தெரிகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement