[X] Close >

ஷங்கரின் ‘இந்தியன்2’படத்திற்கு அனிருத் இசை?

Anirudh-to-compose-music-for-Kamal---s----Indian-2---

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் ‘இந்தியன்2’ படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். 


Advertisement

அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் கமல்ஹாசன் ‘இந்தியன்2’ படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. இயக்குனர் ஷங்கர் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் ‘2.0’படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்திற்கான இறுதிகட்ட வேலைகள் நடைப்பெற்று வருகின்றன. அதை முடித்துக் கொண்டு ‘இந்தியன்2’ படத்திற்கான ஷூட்டிங்கை தொடங்க ஷங்கர் திட்டமிட்டிருக்கிறார். ‘2.0’ படத்தின் வேலைகள் ஒருபுறம் நடந்தாலும், ‘இந்தியன்2’ படத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வையும் நடத்தி வருகிறார். 

அந்த வகையில் ‘இந்தியன்2’ படத்திற்கு இசையமைக்க தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான அனிருத்தை ஒப்பந்தம் செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதுப் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்த நிலையில் தற்போது ‘இந்தியன்2’படத்திற்கும் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement


 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close