இனிகோவிற்கு கை கொடுப்பாரா 'வீரையன்'?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

100 சதவீத ஹீரோ மெட்டீரியல்தான் இனிகோ. சென்னை 28, பூ, அழகர்சாமியின் குதிரை, சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் கூட்டத்தில் ஒருவராக வந்து போன இனிகோ ‘வீரையன்’ படத்தில் ஷோலோ ஹீரோவாகி இருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘வீரையன்’ பட டிரெய்லருக்கே ஏகப்பட்ட வரவேற்பு. டிரெய்லரை பார்த்தே, ’இது ஈரானியப்படம்போல் இருக்கிறது’ என இண்டஸ்ட்ரீயில் பாசிட்டிவ் கமெண்டுகள். பாடல்களும் சூப்பர் ஹிட். இதனால், ஃபுல் எனர்ஜியில் இருக்கிறார் இனிகோ.


Advertisement

”எத்தனையோ படங்களில் நடிச்சிருந்தாலும் நமக்கு நாமே திருப்திபட்டுக்கொள்கிற மாதிரியான படங்கள் ஒருசில தான் அமையும். அப்படிப்பட்ட படம்தான் வீரையன். அதுவும் நான் ஹீரோவாக நடிக்கிற முதல்படமே அப்படி அமைந்துவிட்டது அதிர்ஷ்டம்தான். களவாணி படத்தின் முக்கிய தூணாக இருந்த பரீத் இந்தப்படத்தை தயாரித்து, இயக்குகிறார். புதுக்கம்பெனி, புது டைரக்டர், சின்ன பட்ஜெட் படமா தான் இருக்கும்னு நினைச்சுதான் முதல்நாள் சூட்டிங் கிளம்பினோம். ஆனால், அங்கே 2 கேமிரா, 20 பைட்டர்ஸ்னு பெரிய படத்திற்கான செட்டப்போட வேறமாதிரி இருந்தது. இயக்குநர் பரீத்துக்கு இது தான் முதல் படம். ஆனால், 10 படத்திற்கும் மேல் இயக்கிய அனுபவஸ்தர் மாதிரி கொஞ்சம் கூட பதற்றமே அவரிடம் இல்லை. படத்திற்கு என்ன வேணுமோ அந்த சீன்களை தவிர, வேற எதையும் அவர் எடுக்கவில்லை. அவ்வளவு நேர்த்தியா ஒவ்வொரு சீனையும் எடுத்தார். அப்பவே இந்தப்படம் வேற லெவல்னு நம்பிக்கையை கொடுத்தது. எடுத்த காட்சிகளை எடிட் பண்ணும்போது ஒவ்வொரு சீனும் அவ்வளவு கச்சிதமா பொருந்துச்சு.


Advertisement

தஞ்சையில 1989 ல நடக்குற ப்ரீயட் படம்தான். அப்போ நடந்த ஒரு சம்பவத்தை மையமா வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் பரீத். இப்போ போஸ்ட் புரடெக்சன் வேலைகள் நடந்துட்டு இருக்கு. அருணகிரி இசையில பாடல்களும் பட்டைய கிளப்புது. டிரைய்லர் பார்த்துட்டு சசிகுமார் சார், ரொம்ப நல்ல படமா வந்திருக்கு. இனிமேல் தான் உன்பயணமே ஆரம்பம்னு பாராட்டினார். படமும் சீக்கிரம் வெளியாகப் போகுது. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இவ்வளவு நாட்கள் காத்திருப்புக்கு இந்த ’வீரையன்’ அர்த்தம் கொடுப்பான் சார்’’ என்று அழுத்தமாகவும் நம்பிக்கையாகவும் வருகிறது இனிகோவிடம் இருந்து வார்த்தைகள்.

loading...

Advertisement

Advertisement

Advertisement