மதுரையில் இரவு நேரங்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரையில் எஸ்.எஸ் காலணி, கரிமேடு, சுப்பிரமணியபுரம், தல்லாகுளம், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில், இரவு நேரங்களில் நடந்து செல்லும் பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்கள் நகைகளை பறித்து செல்லும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன. இதனால் காவல்துறைக்கு தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து மாநகர காவல் ஆணையாளர் மகேஸ்குமார் அகர்வால், செயின் பறிப்பு கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
அதன்படி இரவு நேரத்தில் செயின் பறிப்பு நடைபெறும் சாலைப்பகுதிகளில், காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். செயின் பறிப்புகளில் ஈடுபடும் திருடர்களை பிடிக்கும் போது, அவர்கள் தப்பிச்செல்லாமல் இருக்க குறிப்பிட்ட சாலைகளில் பதுங்கியிருந்தனர். இந்நிலையில் நேற்று பெண் ஒருவரிடம் செயின் பறித்துக்கொண்டு சென்ற திருடர்களை திட்டமிட்டபடி மடக்கிப்பிடித்தனர். இதில் புவனேஸ்வரன், ராஜ்குமார், சிலம்பரசன், மனோஜ்குமார், சதீஸ்குமார், செல்வகணேஷ், கோபிநாத் ஆகிய 7 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள், 52 அரை சவரன் நகைகள் மீட்கப்பட்டன. பின்னர் 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Loading More post
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்