'பல சூழ்ச்சிகளை கடந்துப் பெற்ற வெற்றி' ஹர்பஜன் சிங் பெருமிதம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. நேற்று மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக் கண்டது. ஐ.பி.எல். போட்டியில் இரண்டாண்டு தடைக்குப் பின் வெற்றி வாகை சுடியது, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்ததில் இருந்து, தமிழில் ட்விட் போட்டு கிறங்கடித்து வருகிறார், தமிழ் சிங் ஆகிப்போன ஹர்பஜன் சிங்.


Advertisement

நேற்றைய வெற்றிக்குப் பின் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் "தோட்டாவென கிளம்பிய பந்துகள். கண்ணில் நீருடன் குருதியில் மஞ்சளேந்தி ஐ.பி.எல். கோப்பையை வென்றோம். எமை அடித்து, அழுத்தி ஆட(ள) முற்பட்ட போதும் மக்கள் சக்தியாக பல சூழ்ச்சி் கடந்து போராடி கிடைத்த வெற்றி சென்னை மக்களுக்கு சமர்ப்பணம். மக்களை வென்றதே நமது வெற்றி. சுட்டாலும் சங்கு வெண்மையே. நன்றி." என பதிவிட்டுள்ளார் அவர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement