அமைதியாக ஆரம்பித்து, அதிரடியில் அரைசதம் போட்ட வாட்சன்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணியின் தொடக்க வீரர் வாட்சன் அரை சதம் அடித்தார்.


Advertisement

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஐதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. ஐதராபாத் அணியிடம் வலுவான பந்துவீச்சு இருப்பதால், இது கடினமான இலக்காக கருத்தப்பட்டது. அந்த அணியில் கேப்டன் வில்லியம்சன் 47 (36), யூசுப் பதான் 45 (25), தவான் 26(25), சாகிப் உல் ஹாசன் 23 (15) ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் ஷர்தூல் தாகூர் மற்றும் ப்ராவோ தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 


இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் வாட்சன் மற்றும் டு பிளசிஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 11 பந்துகளுக்கு 10 ரன்கள் எடுத்த நிலையில் டு பிளசிஸ் ஆட்டமிழந்தார். பின்னர் ரெய்னா மற்றும் வாட்சன் கூட்டணி அமைத்து விளையாடினார்கள். 16 பந்துகளை கடந்த பின்னர் வாட்சன் தனது அதிரடியை தொடங்கினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர், 33 பந்துகளில் அரை சதம் அடித்தார். அவரது அதிரடியால் சென்னை அணியின் வெற்றி எளிதாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, சென்னை அணி 13 ஓவர்களுக்கு 1 விக்கெட் மட்டும் இழந்து 131 ரன்கள் எடுத்துள்ளது. வாட்சன் 97 (48) மற்றும் அம்பதி ராயுடு 1 (1) ரன்களுடன் களத்தில் உள்ளனர். வாட்சன் சதத்தை நெருங்கியுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement