‘மாயாவதி பிரதமர் வேட்பாளர்’ - பகுஜன் சமாஜ் புது திட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மாயாவதியை பிரதமர் வேட்பாளராக கொண்டு 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலை சந்திக்க பகுஜன் சமாஜ் கட்சி திட்டமிட்டுள்ளது. 


Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில் அக்கட்சி இந்தத் திட்டத்தை முன் வைத்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி உத்தரபிரதேச எல்லையை கடந்து தேசிய அளவிலான கட்சியாக மாற்ற முயற்சி செய்ய திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கரில் காங்கிரஸ் கட்சியுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் பேசப்பட்டது.


Advertisement

கர்நாடக தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பின்னர், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க மயாவதி உதவினார். குமாராசாமி முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்ச்சியிலும் பெரும்பாலான பாஜக எதிர்ப்பு கட்சிகளுடன் மாயாவதியும் கலந்துக் கொண்டார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியும் கலந்துக் கொண்டார்.  

இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் மாயாவதி உடன் சோனியா, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் நெருக்கம் காட்டினர். உத்தரபிரதேசத்தில் ராஷ்டிர ஜனதா தளம் கட்சியின் அகிலேஷ் யாதவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் உள்ளார். முன்னதாக இவர்களின் கூட்டணிக்கு இடைத்தேர்தலிலும் வெற்றி கிட்டியது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement