[X] Close >

வயலுக்கு சென்று வீடு திரும்பாத முதியவர் : சென்று பார்த்ததில் கொடூரம்!

Madurai-Usilampatti-Old-Man-Murdered-Brutally

உசிலம்பட்டி அருகே வயலுக்கு பணிக்காக சென்றுவிட்டு வீடு திரும்பாத முதியவரை, தேடிப்பார்த்த போது தலையை வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 


Advertisement

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வண்ணாங்குளத்தைச் சேர்ந்த ராமு. இவர் நகை தயாரிக்கும் தொழில் மற்றும் விவசாயம் செய்து வருகிறார். இவர் இன்று ஊரின் அருகே உள்ள தனது தோட்டத்தில் விவசாய வேலைக்கு சென்றுள்ளார். வழக்கமாக வேலைக்கு சென்றால், மதிய உணவிற்கு வீடு திரும்பும் ராமு, இன்று நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் ராமு எங்கே போனார்? என்ற சந்தேகத்துடன் தோட்டத்திற்கு வந்து குடும்பத்தினர் பார்த்துள்ளனர்.


Advertisement

அங்கு ராமு கிடந்த நிலையை பார்த்ததும், அவர்கள் அதிர்ச்சியைடைந்து சொல்ல முடியாத சோகத்தில் மூழ்கினர். ஏனெனில் தோட்டத்தில் ராமு, தலை தனியாக உடல் தனியாக வெட்டப்பட்டு கிடந்துள்ளார். இதையடுத்து அலறிய குடும்பத்தினர், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ராமுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பின்னர் ராமு எதனால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அதில் ராமுவிற்கும் பலருக்கும் பகை இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்களில் யாரோதான் முன் விரோதம் காரணமாக கொலை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ராமுவிற்கு, மனைவி அய்யம்மாள், ஒரு மகன் மற்றும் 4 பெண் குழந்தைகள் உள்ளனர். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close