ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் தகுதிப் பெற்றுவிட்டது. இப்போது சி.எஸ்.கே.வுடன் மோதுவது யாரு என்பதுதான் கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் எலிமினேட்டர் போட்டியில் விளையாடவிருக்கிறது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி, அடுத்து ஐதராபாத் அணியை சந்திக்க வேண்டும்.
தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறிவிடும். எனவே, இறுதிப் போட்டியில் சி.எஸ்.கே.வுடன் மோதப்போவது கொல்கத்தாவா, ராஜஸ்தானா அல்லது ஐதராபாதா என இரண்டு நாள்களில் தெரிந்துவிடும்.
கொல்கத்தா தனது கடைசி லீக்கில் ஐதராபாத்தை வீழ்த்தி 16 புள்ளிகளுடன் பிளே-ஆப் சுற்றை உறுதி செய்தது. கொல்கத்தா அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக இருக்கிறது. அந்த அணியின் பெரும் பலம் அதன் கேப்டனான தினேஷ் கார்த்திக். அதிரடி ஆட்டமும் யூகங்களை வகுப்பதிலும் கை தேர்ந்தவர். ஆல்-ரவுண்டராக கலக்கும் சுனில் நரேன், அதிரடியில் மிரட்டும் கிறிஸ் லின், இளைஞரான சுப்மன் கில் ஆகியோர் தான் அந்த அணியின் வெற்றிப்பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஏற்கெனவே லீக் சுற்றில் ராஜஸ்தான் ராயல்சை இரண்டு முறையும் வீழ்த்தியிருப்பதால்
நம்பிக்கையின் உச்சத்தில் இருக்கிறது கொல்கத்தா.
ராஜஸ்தான் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றதற்கு, அதிர்ஷ்டம் ரஹானே வீட்டு வாசலை தட்டியதே காரணம். ராஜஸ்தான் அணியின் பெரும் தூண் ஜோஸ் பட்லர், அவரால்தான் கடைசி நேரங்களில் சில போட்டிகளை வென்றது ராஜஸ்தான். மேலும் கடந்த சில ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளரும், ஆல்-ரவுண்டருமான கிருஷ்ணப்பா கவுதம், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் அந்த அணியின் ட்ரம்ப் கார்டு. இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி போட்டியை விட்டு வெளியேற்றப்படும். வெற்றி காணும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற ஐதராபாத்
அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் விளையாடும். எனவே, இந்தப் போட்டியிலும் பரபரப்புக்கு பஞசம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?