கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ வசதி அளிக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100-ஆவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆட்சியர் நுழைந்த பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஜெயராமன், கிளாட்ஸன், கந்தையா, வினிஸ்டா, தமிழரசன், சண்முகம், மற்றும் மணிராஜ் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து துத்துக்குடி முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் எஸ்பி அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றபோது, மேலும் ஒரு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்வபங்களுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள விஜயகாந்த், மக்கள் விரும்பாத ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அத்துடன் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதாலேயே கலவரமாக மாறியதாக குறிப்பிட்டுள்ள விஜயகாந்த், மக்களின் உயிரும், உடமைகளுமே மட்டுமே முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார். கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Loading More post
புதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!
புதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!
கண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்!
“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி
ராமர் பாலம் எப்போது, எப்படி உருவானது? - கடலுக்கடியில் ஆய்வு செய்ய மத்திய அரசு ஒப்புதல்!
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!